திட்டமிட்டபடி காரியங்கள் சரியாக நடந்தால் அடுத்த மாதம் பேருந்து சேவை தொடங்கப்படும் என திரிபுரா அரசாங்கத்தின் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கரோனா தாக்கம் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில் , தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து புறப்படும் பேருந்து அகர்தலா வழியாக டாக்கா சென்றடையும்.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கு வங்க மாநில போக்குவரத்து கழகம் முன்னெடுத்து இருக்கிறது. திரிபுரா மாநிலத்தின் அகர்தாலாவில் இருந்து கொல்கத்தா செல்ல சுமார் 20 மணி நேரம் ஆகும். இதுவே ரயில் பயணம் செய்தால் 38 மணி நேரம் வரை ஆகலாம்.
திரிபுராவில் உள்ள கிருஷ்ணாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு பேருந்து புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. பேருந்து பயணத்திற்கு ஒருவரிடம் பாஸ்போர்ட், போக்குவரத்து விசா மற்றும் தேவையான ஆவணங்கள் தேவை இருக்க வேண்டும். ஒரு பயணியிடம் 2ஆயிரத்து 300 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதையும் படிங்க: டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது!