ETV Bharat / international

இந்தோனேசிய ஆளுநரின் மகன் உடல் சுவிஸ் ஆற்றில் கண்டெடுப்பு! - சுவிட்சர்லாந்து ஆற்றில் மூழ்கி இந்தோனேசியா ஆளுநர் மகன் உயிரிழப்பு

இந்தோனேசிய ஆளுநரின் மகன் சுவிட்சர்லாந்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரின் உடல் உள்ளூர் காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் மகன் உடல் சுவிஸ் ஆற்றில் கண்டெடுப்பு

author img

By

Published : Jun 10, 2022, 9:35 PM IST

ஜெனீவா(சுவிட்சர்லாந்து): இந்தோனேசிய நாட்டில் மேற்கு ஜாவா மாகாண ஆளுநராக இருப்பவர், ரித்வான் கமில். இவரின் மூத்த மகன் எம்மரில் எரில் கான் மும்தாஜ் (22) கடந்த சில நாட்களுக்கு முன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஆரே ஆற்றில் நண்பர்களுடன் கடந்த மே 26ஆம் தேதி குளிக்கச்சென்றுள்ளார்.

இதில் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கிய எம்மரில், நீரில் மூழ்கியுள்ளார். உள்ளூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. பெர்ன் காவல் துறையினர் ட்ரோன்கள், மோப்ப நாய்கள், படகுகள் கொண்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சுவிட்சர்லாந்து நாட்டு அலுவலர்கள் எம்மரில், உடல் மீட்கப்பட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு... 50 பேர் உயிரிழப்பு...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.