கீவ் (உக்ரைன்): உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரபல உணவகத்திற்கு பிரபலங்கள், முன்னணி பத்திரிகையாளர்கள் என முக்கிய நபர்கள் அதிகம் வருவது உண்டு. இந்த உணவகத்தை குறிவைத்து, ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், விருதுகள் பல வென்ற உக்ரைன் எழுத்தாளர் விக்டோரியா அமெலினா உள்ளிட்ட பலர் உயிரிழந்து இருப்பதாக, PEN அமெரிக்கா அமைப்பு தெரிவித்து உள்ளது.
இலக்கியவாதியாக திகழ்ந்த 37 வயதான அமெலினா, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யப் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி, ரஷ்யப் படைகள், கிரமடோர்ஸ்க் பகுதியில் உள்ள உணவகம் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெலினா உயிரிழந்ததாக, இலக்கியம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, ஜுலை 02ஆம் தேதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெலினா உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ள உக்ரைன் நாட்டின் கலாசாரத் துறை அமைச்சர் ஒலெக்சாண்டர் கசென்கோ, இந்த தாக்குதலுக்கு, ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். "நமது மண்ணில் நடக்கும் ஒவ்வொரு குற்றத்திற்கும், பயங்கரவாதி கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.
அமெலினாவின் நண்பர்கள், சகாக்கள் மற்றும் அபிமானிகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து உள்ள பத்திரிகையாளர் ஓல்கா டோகாரியுக், அவளது ஆற்றல் நிறைந்த வாழ்க்கை, சோகங்களால் குறைந்து போய்விட்டது. "எத்தனையோ புத்தகங்கள் எழுதப்படாதவை, சொல்லப்படாத கதைகள், வாழாத நாட்கள்" என்று அவர் ட்வீட் செய்து உள்ளார்.
"விக்டோரியா, ரஷ்யர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தினார். அதுபோன்ற மற்றொரு போர்க்குற்றத்தில் அவர் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கும் உக்ரைனில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் நாங்கள் சாட்சி அளிக்கிறோம்" என்று வரலாற்று ஆய்வாளர் ஒலேஸ்யா க்ரோமேச்சுக் ட்வீட் செய்து உள்ளார்.
உணவகம் பிஸியாக இருந்த இரவு உணவு நேரத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெற உதவியதாக, உக்ரேனிய அதிகாரிகள் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
அமெலினா கொலம்பிய எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் குழுவுடன் கிராமடோர்ஸ்க் நகரத்தில் தங்கி இருந்து, ட்ரூத் ஹவுண்ட்ஸ் என்ற மனித உரிமை அமைப்பில் சார்பில், ரஷ்யப் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி வந்தார். அமெலினாவின் உயிரிழப்பு செய்தியை, PEN உக்ரைன் அமைப்பு, அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து உள்ளது.
விக்டோரியா அமெலினா ஒரு புகழ்பெற்ற உக்ரைனிய எழுத்தாளர் ஆவார், அவர் 2022ஆம் ஆண்டில், பிப்ரவரி மாதத்தில், ரஷ்யப் படையினர், உக்ரைனில் படையெடுப்பிற்குப் பிறகு நிகழ்ந்த போர்க்குற்றங்களை விசாரிக்கவும், அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, PEN அமெரிக்காவின் யூரேசியா பிரிவின் இயக்குநர் பொலினா சேடோவ்ஸ்கயா குறிப்பிட்டு உள்ளார்.
1986ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி விவ் நகரத்தில், விக்டோரியா அமெலினா பிறந்தார். இவரது முதல் நாவலான “தி நவம்பர் சிண்ட்ரோம் அல்லது ஹோமோ கம்பாட்டியன்ஸ்” நாவல், உக்ரைன் நாட்டின் வலேரி ஷெவ்சுக் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"Somebody, or Waterheart" மற்றும், "Storie-e-es of Eka the Excavator என்ற குழந்தைகளுக்கான இரண்டு நாவல்கள், விருது பெற்று உள்ளன. 2017ஆம் ஆண்டில், "டோம்ஸ் ட்ரீம் கிங்டம்" நாவல், யுனெஸ்கோ இலக்கிய நகரப் பரிசு மற்றும் இலக்கியத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய பரிசு உட்பட பல்வேறு பரிசுகளை வென்று உள்ளது.
இவரின் புனைகதைகள் மற்றும் கட்டுரைகள் ஆங்கிலம், போலந்து, இத்தாலியன், ஜெர்மன், குரோஷியன், டச்சு, செக் மற்றும் ஹங்கேரியன் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 2021ஆம் ஆண்டில், உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நியூயார்க் நகரத்தில், நியூயார்க் இலக்கிய விழாவை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில், ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய போர்க்குற்றங்களை ஆவணப்படுத்த அமெலினா தன்னை அர்ப்பணித்துக்கொண்டதாக PEN அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
"போர் மற்றும் நீதி நாட்குறிப்பு: போரைப் பார்க்கும் பெண்கள்" என்னும் ஆவணத்தொடரில், அமெலினா ரஷ்ய போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரித்து, உக்ரைன் பெண்களின் கதைகளை விவரிக்க இருந்தார். PEN உக்ரைனின் கூற்றுப்படி, இது விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.