ஜெர்மனி: ஆல்ப்ஸ் மலையில் ஞாயிறுவிடுமுறை நாளையொட்டி அதிக சுற்றுலா பயணிகள் கூடியுள்ளனர். அங்கு பனிப்பொழிவு கடுமையாக உள்ளதால் பனிச் சறுக்கு வீரர்கள் சாகசங்களில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், திடீரென அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ஆஸ்திரியா இத்தாலி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 9 பனிச் சறுக்கு வீரர்கள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் ஆஸ்திரியாவின் கிழக்கு டிரோல், ஜில்லெர்டல், க்ளீன்வால்செர்டல், கவுண்டர்டல் போன்ற இடங்களில் இருந்து மீடகப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், மேலும் பலரை காணவில்லை எனவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதாலும், பனிச்சரிவு ஏற்படுவதாலும் தேடுதல் பணியில் தாமதம் ஏற்படுவதாக அதிகரிகள் தெரிவித்தனர். பனிச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்ட போதிலும், அதனை பொருட்படுத்தாமல், பனிச் சறுக்கு வீரர்கள் சாகசங்களில் ஈடுபட்டதால் தான் இத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! - 15 பேர் பலி எனத் தகவல்