வீன் : அமெரிக்காவின் மத்திய மாகாணங்களை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் 26 பேர் உயிரிழந்தனர். அர்கான்சஸ், இல்லினாய்ஸ் உள்ளிட்ட மகாணங்களில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வீசிய சூறாவளிக் காற்றில் வீடுகள், கட்டடங்கள், குடியிருப்புகள் முற்றிலும் சூறையாடப்பட்டன.
டென்னிஸ்சி மாவட்டத்தில் மட்டும் சூறாவளிக் காற்றால் ஏற்பட்ட கடட்ட இடிபாடுகள் மற்றும் விபத்துகளில் சிக்கி 9 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் சிறிய டவுனான வீன், அர்கான்சஸ், சுல்லீவன், இந்தியா மற்றும் இல்லினாய்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சூறாவளிக் காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர். மேலும் பலர் வீடுகளை இழந்து சொந்த ஊர்களிலே அகதிகளாக மாறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அல்பாமா, மிஸ்செஸ்சபி உள்ளிட்ட நகரங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் வீசிய சூறைக்காற்றில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 600 கட்டிடங்கள் காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு உருக்குலைந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வீன் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சாலைகளில் ராட்சத மரங்கள் விழுந்து நொறுங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளன. சாலையில் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். பல்வேறு நகரங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியதால் மீண்டும் பொது போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இந்த புயல் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் இரு பெரும் வங்கிகள் திவால், நிதி நெருக்கடி, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் பெரும் தலைவலியாக உள்ள நிலையில் தற்போது தாக்கிய சுறாவளிக் காற்று அந்நாட்டு அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் பைடன் அரசு இதில் கவனமுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Autism Awareness Day : உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் - ஊனம் நீக்கி உலகம் ஒன்றுபடுவோம்!