ETV Bharat / international

மச்சு பிச்சு சுற்றுலா தளத்தில் சிக்கிய 417 பேர்.. பெருவில் தொடர் பரபரப்பு! - Machu Picchu

பெருவில் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களால் புராதன சுற்றுலா தளமான மச்சு பிச்சு மூடப்பட்டது. தொடர் அரசு எதிர்ப்பு போராட்டங்களால் மூடப்பட்ட மச்சு பிச்சுவில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 417 பேர் தவித்து வருகின்றனர்.

மச்சு பிச்சு
மச்சு பிச்சு
author img

By

Published : Jan 22, 2023, 2:21 PM IST

லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் வலுத்து வருகின்றன. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக அதிபர் கேஸ்டிலோ கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் பொலுவார்ட் அதிபராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் அமைச்சரவையைக் கலைத்து, மீண்டும் தேர்தல் நடத்தி ஆட்சியைக் கைப்பற்ற பொலுவார்ட் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொலுவார்ட் அதிருப்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது பாதுகாப்புப் படை கண்மூடித்தன தாக்குதல் நடத்தி வருகிறது.

பாதுகாப்பு வீரர்களின் தாக்குதலால் ஏறத்தாழ 55 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தலைநகர் லிமாவில் உள்ள பல்கலைக்கழகத்தைத் தலைமையிடமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாதுகாப்புப் படை நடத்திய இரக்கமில்லாத தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாகவும் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏழு அவசியங்களில் ஒன்றும், 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன சின்னமான மச்சு பிச்சுவில் அனல் பறக்கும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மச்சு பிச்சு நகருக்குச் செல்லும் ரயில் பாதைகளை மக்கள் சேதப்படுத்தி போக்குவரத்தைத் துண்டித்தனர். இதையடுத்து புகழ்பெற்ற மச்சு பிச்சு சுற்றுலா தளம் மூடப்பட்டது.

தொடர் போராட்டங்களால் மச்சு பிச்சு நகரை விட்டு வெளியேற முடியாமல் 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்பட 417 பேர் சிக்கித் தவித்து வருவதாகப் பெரு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து துண்டிப்பு காரணங்களால் மச்சு பிச்சுவில் சிக்கிக் கொண்டவர்களை வெளியே அழைத்து வரும் பணிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. பிஎப்ஐ மாஸ்டர் பிளான்.. என்ஐஏ குற்றப்பத்திரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.