ETV Bharat / international

உலகம் முழுவதும் 780 பேருக்கு குரங்கு அம்மை... பாலியல் சுகாதாரமின்மை காரணமா..? - monkeypox death rate

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

780-cases-of-monkeypox-reported-or-identified-as-of-june-2-who

author img

By

Published : Jun 6, 2022, 12:51 PM IST

ஜெனிவா: இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குரங்கு அம்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகிறது. கடந்த மே 13ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 27 நாடுகளில் 780 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.

முதல்கட்ட ஆய்வுகளில், பாலியல் சுகாதாரமின்மை உள்ளோருக்கும், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் சில ஆண்களுக்கும் (Men Who Have Sex With Men (MSM)) குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவின் நைஜீரியாவிலிருந்து வெளியேறிய பயணிகள் மூலம் குரங்கு அம்மை பரவிய உள்ளது.

அதோடு கேமரூன், காங்கோ, காபோன், கானா (விலங்குகளுக்கு மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது), லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன், பெனின், தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில நாடுகளில் பயண தொடர்பில்லாதவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குரங்கு அம்மை பரவலை தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.