ETV Bharat / international

ஆஸ்திரேலியா செல்லும் ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியது - 7 பேர் காயம்!

163 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என 175 நபர்களுடன், ஆஸ்திரேலியா நோக்கி வானில் பறந்து கொண்டு இருந்த ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம், "ஏறக்குறைய ஐந்து மணி நேரத்திற்குள் எதிர்பாராத கடுமையான கொந்தளிப்பை (குலுங்கல்) எதிர்கொண்டது." இந்த சம்வத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

7 injured in turbulence on Hawaiian Airlines flight to Australia
ஆஸ்திரேலியா செல்லும் ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியது - 7 பேர் காயம்!
author img

By

Published : Jul 4, 2023, 3:28 PM IST

ஹொனலுலு: ஹவாய் நாட்டின் ஹொனலுலுவில் இருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 163 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என 175 பேருடன் புறப்பட்ட ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம், "புறப்பட்ட ஏறக்குறைய ஐந்து மணி நேரத்திற்குள் எதிர்பாராத கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டது" இந்த சம்பவத்தில் 7 பேர் காயம் அடைந்ததாக, விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பயணி சுல்தான் பாஸ்கோனியாலி கூறியதாவது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அசாதாரண சூழல் ஏற்பட்டு, விமானம் குலுங்கத் துவங்கியது. ஒரு மனிதன் மேல்நோக்கிச் செல்வதையும், அவன் தலையை கூரையில் இடித்ததையும், மீண்டும் கீழே இறங்குவதையும் அவர் விவரித்தார். விமானம் சிட்னியில் தரையிறங்கியபோது காயமடைந்த மூன்று பயணிகளை, விமான நிலைய மருத்துவர்கள் மதிப்பீடு செய்து அவர்களுக்கு உகந்த சிகிச்சை வழங்கப்பட்டதாக, விமான நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

ஒரு பயணி மற்றும் மூன்று விமான பணிப்பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை முடிந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஜூலை 03ஆம் தேதி, விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது. "விமானத்தில் இருந்த எனது இரு குழந்தைகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டாலும், விமான நிறுவனத்திடமிருந்து நான் எதுவும் கேட்கவில்லை" என்று மற்றொரு பயணியான தாரா குடால் தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளார்.

"இந்த கொந்தளிப்பு நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களைத் தொடர்ந்து கவனிப்பதே எங்கள் உடனடி முன்னுரிமையாகும், மேலும் சிட்னி விமான நிலையத்தில், விரைந்து செயல்பட்டு, முதலுதவி மேற்கொண்டவர்களுக்கு, நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தாரா குடால் வழங்கிய இந்த போட்டோ,, ஜூன் 30, 2023 அன்று ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஹொனலுலுவில் இருந்து சிட்னிக்கு செல்லும் ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆக்சிஜன் முகமூடிகள் மற்றும் அவரது தலையில் ஐஸ் கட்டியுடன் ஒரு பயணி இருப்பதாக உள்ளது. விமானம் சிட்னியில் தரையிறங்கிய போது. ஒரு பயணி மற்றும் மூன்று விமான பணிப்பெண்கள் "சிகிச்சைக்கு அனுப்பப்பட்டதாக" என்று விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது

கடந்த 2022ஆம் ஆண்டின், டிசம்பர் மாதம் 18ஆம் தேதி, அன்று ஃபீனிக்ஸிலிருந்து ஹொனலுலுவுக்குச் சென்ற ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடுமையான கொந்தளிப்பு காரணமாக 25 பேர் காயமடைந்தனர். நான்கு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் பலத்த காயமடைந்தனர். விமானம் சிறிய அளவில் சேதம் அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹவாய் ஏர்லைன்ஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜான் ஸ்னூக் கூறியதாவது, இதுபோன்ற கொந்தளிப்பு அசாதாரணமானது. சமீபத்திய வரலாற்றில் விமான நிறுவனம் இதுபோன்ற நிகழ்வுகள் எதையும் சந்தித்ததில்லை. காயமடைந்தவர்களில் சிலர் சீட் பெல்ட்களை அணியவில்லை என்றாலும், சீட் பெல்ட்டைக் கட்டுவதற்கான அடையாளம் அந்த நேரத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஹொனலுலு நகரத்தில் தரையிறங்குவதற்கு சுமார் 40 நிமிடங்களுக்கு முன்பு இது நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ட்ரோன் தாக்குதலை நிகழ்த்திய ரஷ்யா - முடித்து வைத்த உக்ரைன்: 12 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ‘பரபர’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.