கெய்ரோ: எகிப்தின் சூயஸ் நகரில் நேற்று(செப்.2) இரண்டடுக்கு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, எகிப்தின் வடக்குப்பகுதியில் உள்ள ஃபாகுஸ் நகரில் மினிபஸ் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
எகிப்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோகின்றன. மோசமான சாலை பராமரிப்பு, போக்குவரத்து விதிகளை பின்பற்றாமை, அதிவேகமாக செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் நடக்கின்றன. அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக, சாலை விபத்துகளைக் குறைக்க, புதிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசு கட்டி வருகிறது.
இதையும் படிங்க:ஆப்கன் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 18 பேர் உயிரிழப்பு, 21 பேர் படுகாயம்