டாக்கா: வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள கப்பல் கொள்கலன் கிடங்கில் நேற்று (ஜூன் 5) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 450 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சட்டகிராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிட்டகாங் போலீசார் தரப்பில், "நேற்றிரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 650 ஊழியர்கள் கிடங்கில் இருந்தனர்.
தீயணைப்பு துறை அலுவலர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரவதற்குள் தீ மற்றொரு கொள்கலனுக்கு பரவியது. அப்போது கொள்கலன் வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் அருகிலிருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இன்று காலை நிலரப்படி 19 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கும், காயமடைந்தவர்களுக்கும் அந்நாட்டு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மருத்துவ செலவையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: குஜராத்தின் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து