கான்பரா: குயின்ஸ்லாந்து மாகாணம், வியம்பில்லா பகுதியில் பண்ணை வீடு ஒன்றில் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய கும்பலிற்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு போலீசார், ஒரு பொதுமக்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
திடீர் துப்பாக்கிச்சூடு: நேற்று (டிச.12) அதிகாலை 4.45 மணியளவில் காணாமல்போன ஒருவர் பண்ணை வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரை வியம்பில்லா என்ற பகுதியிலுள்ள பண்ணை வீட்டிற்கு முதலாவதாக 2 போலீசார் சென்றனர். இந்நிலையில், அந்த வீட்டிற்குள் முன்னதாக மறைந்திருந்த பெண் உட்பட்ட 2 கொண்ட கும்பல் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர்.
இதனையடுத்து போலீசாரும் பதிலடிக்காக துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, போலீசார் இருவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த கும்பலினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசாரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, இந்த துப்பாக்கி சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் அக்கும்பல் துப்பாக்கியால் சுட்டதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பிற போலீசாரும் அந்த பண்ணை வீட்டிற்குள் சென்று நடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வீட்டிற்குள் மறைந்திருந்த அக்கும்பல், மீண்டும் வெளியே வந்து போலீசாருடன் துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பதில் நடததிய போலீசாரும் அந்த மூன்று பேரையும் சுட்டு வீழ்த்தினர்.
6 பேர் உயிரிழப்பு: இதனையடுத்து, முதலாவதாக 2 போலீசார், உள்ளூர் வாசி ஒருவர் ஆகிய மூன்று பேரும், இரண்டாவதாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத பெண் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் ஆகியோர் என உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 பேர் ஆகியது. இந்த பயங்கர சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்கள் இரங்கல்: இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், 'வியம்பில்லாவில் நடந்த இந்த பயங்கர சம்பவம், தனது நாட்டின் கடமைக்காக தங்களது இன்னுயிரை அளித்த குயின்ஸ்லாந்து போலீசாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்நாள் இதயத்தை உறைய வைக்கும் நாளாகும். துக்கத்தில் உள்ள அனைவருடனும் ஆஸ்திரேலியாவும் தனது துக்கத்தை அனுசரிக்கிறது' என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரான பீட்டர் டட்டன், 'வியம்பில்லாவில் நடந்த இந்த கோர சம்பவம் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, வியம்பில்லா பகுதி முழுவதும் அவசர நிலை பிரகடனம் இருந்தபோதிலும், இத்தகைய பயங்கர தாக்குதலில் போலீசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன தொழிலதிபர்கள் தங்கும் விடுதியில் தாக்குதல்... காபூலில் பரபரப்பு