ETV Bharat / international

குழந்தைகள் வாழ மோசமான நாடு ஏமன்! - ஏமனில் குழந்தைகள் உரிமைகள்

நியூயார்க்: அரபு நாடான ஏமனில் குழந்தைகள் கடும் பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றனர் என்று யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது. மேலும் ஏமன் குழந்தைகளுக்கான மோசமான நாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"Yemen one of worst countries for children"
author img

By

Published : Nov 24, 2019, 7:00 PM IST

இதுதொடர்பாக யுனிசெப் தரப்பில் கூறப்படுவதாவது, ‘ஏமன் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு இன்னமும் மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட இந்த தேசத்தில் 12 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது.

நாட்டின் தென்மேற்கு நகரமான தைஸில் உள்ள ஒரு பள்ளி இடிந்து கிடக்கிறது. நாட்டின் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இடிந்த கட்டிடங்களில், அவர்கள் இன்னும் பாடம் கற்கின்றனர். இது கல்வி கற்க மாணவர்களுக்கு நல்ல சூழல் அல்ல.

தொடர்ச்சியான மிருகத்தனமான மோதலும் அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடியும் நாடு முழுவதும் அடிப்படை சமூக சேவை அமைப்புகளை சரிவின் விளிம்பில் தள்ளியுள்ளன. இது குழந்தைகளுக்கு நீண்டகால மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏமனில் எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு சாப்பிட உணவு கிடைக்காமல், அவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் கூட போகலாம், பள்ளிக்குச் சென்றாலும் அவர்கள் பாறைகளில் தான் அமரக்கூடும். சாதா பகுதியில் குழந்தைகள் குகையில் அமர்ந்து படிக்கிறார்கள். இவையெல்லாம் ஏமனில் நடக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு, ஏமனின் குழந்தைகளுக்கு ஒரு கல்வி கிடைத்தது. அவர்கள் கற்றுக்கொண்டு வளர்ந்தார்கள். ஆதலால் அந்த சமூகம் செழித்தது. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு அந்தக் கல்வி கிடைத்ததா? அல்லது கிடைக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமே. ஆனால் நாங்கள் உறுதியாக உள்ளோம். குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும். அவர்கள் நிலை உயர வேண்டும். குழந்தைகளின் உரிமைகளை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏமனில் கடந்த 2014ஆம் ஆண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். அதன் பின்னர் இவ்விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலையிட்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்களை விரட்டியடித்தது.

ஏமனில் உள்ள ஒரு பள்ளிக்கூடம்
அந்த போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். பசி, பஞ்சம், பட்டினி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு நாட்டுக்குச் சென்று தஞ்சம் புகுந்தது நினைவுக் கூரத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.