மத்திய கிழக்கு நாடான ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு கலகம் நிலவிவருகிறது. அங்குள்ள அரசை கவிழ்த்து, ஹௌதி கிளர்ச்சிப் படையினர் 2015ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்தனர். ஆனால் ஒரு வருட காலத்திற்குள் அங்குள்ள உள்நாட்டு குழுக்களை இணைத்து சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை கொண்டு மீண்டும் முந்தைய அரசின் ஆட்சியை பெரும்பாலான பகுதிகளில் நிலைநிறுத்தியது.
இது ஒரு புறம் இருக்க உள்நாட்டு குழுக்களில் ஒன்றான எஸ்.டி.சி தெற்கு பிராந்தியத்தில் தனி ஆட்சி கேட்டு போராடத் தொடங்கியது. இந்த குழுவின் கோரிக்கைக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் சௌதி அரேபிய அரசு எதிர் பக்கம் உள்ளது.
இந்நிலையில், தெற்கு ஏமனின் முக்கிய நகரான ஏதனை தலைநகராகக் கொண்டு தெற்கு பிராந்தியத்தை தன்னாட்சி பகுதியாக எஸ்.டி.சி அமைப்பு அறிவித்துள்ளது.
உள்நாட்டு போரால் பெரும் பாதிப்பைச் சந்தித்துவரும் ஏமனில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லைசால்... பிளீச்சிங் பவுடர்...ட்ரம்ப் பேச்சைக் கேட்டு விபரீத முடிவெடுத்த நியூயார்க் வாசிகள்