ETV Bharat / international

மூன்றாம் கட்ட பரிசோதனையில் சினோபார்ம் கரோனா மருந்து - ஆய்வில் ஐக்கிய அரபு அமீரகம்! - ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபி: கரோனாவுக்கான சினோபார்ம் மருந்து அபுதாபியில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jul 18, 2020, 12:00 AM IST

Updated : Jul 18, 2020, 12:11 AM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம் கரோனாவுக்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று(ஜூலை 17) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சீனத் தூதர் நி ஜியான் முன்னிலையில் முறைப்படி மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கியது. அப்போது, மூத்த சுகாதாரத் துறை அலுவலர்கள், ஜி 42 ஹெல்த்கேர், சினோபார்ம் சிஎன்பிஜி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த குழுவினர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திகொண்டனர். இந்த ஆய்வு வெற்றிகரமாக இருந்தால், அபுதாபியின் எமிரேட்ஸ் அறிவியல் ஆராய்ச்சிக்கான நெறிமுறைகள் குழுவால் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையின் தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகமது அல் ஹமீட் கூறுகையில், "சினோபார்ம் சிஎன்பிஜி மருந்தின் முதல் இரண்டு பரிசோதனைகள் வெற்றிகரமாக சீனாவில் நடைபெற்றது.

28 நாள்களில் தன்னார்வலர்களில் உடலில் கரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அபுதாபி அல் ஐனில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட தனிப்பட்ட நபர்களுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனை 48 நாள்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரிசோதனை அபுதாபி ஹெல்த் சர்வீசஸ், செஹாவைச் சேர்ந்த சுகாதாரப் பயிற்சியாளர்களால் நடத்தப்படுகிறது.

இதற்காக, அபுதாபி அல் ஐனில் மொத்தம் ஐந்து கிளினிக்குகளும், ஒரு மொபைல் பரிசோதனை மையமும் உள்ளதால் பரிசோதனை எளிதில் செய்திட முடியும் எனத் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் பரிசோதனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 18, 2020, 12:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.