ஈராக் தலைநகர் பாக்தாத் மேற்கே சலாஹிதின் மாகாணம் வழியாகச் செல்லும் டிக்ரிஸ் நதியில் குவான்ஸ் (quans) என்ற தீவு அமைந்துள்ளது. தற்போது, இந்த தீவானது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் இந்தத் தீவு மீது நேற்று முன்தினம் குண்டு மழைபொழிந்தனர்.
இதுகுறித்து அமெரிக்கக் கூட்டுப்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஃப் 15 (F15), எஃப் 35 (F35) ரக விமானங்கள் மூலம் மொத்தம் 36 ஆயிரம் கிலோ எடை கொண்டு குண்டுகள் குவான்ஸ் தீவுமீது பொழியப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை, 2017ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.