மாம்பழங்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட நபர், துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 3ல் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ஆகஸ்ட் 11, 2017 அன்று, இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டிய பழப்பெட்டியிலிருந்து இரண்டு மாம்பழங்களைத் திருடியுள்ளார். பின்னர் இதுகுறித்து, காவல் துறையினர் அவரை வரவழைத்து விசாரிக்கையில், மாம்பழங்களை திருடியதை ஒப்பிக்கொண்டுள்ளார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதையடுத்து இரண்டு மாம்பழங்களை திருடியதற்காக, 5,000 திர்ஹாம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. பின்னர் இதுகுறித்து விசாரணை திங்களன்று வந்த நிலையில், 27 வயதான இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளியை நாடு கடத்த உத்தரவிடப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த தொழிலாளிக்கு 15 நாட்களுக்குள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.