ETV Bharat / international

போரை நிறுத்த துருக்கி - ரஷ்யா ஒப்புதல் - துருக்கி அதிபர் என்டோர்கன்

மாஸ்கோ: ரஷ்யா - துருக்கி இடையை சிரிய நாட்டு எல்லைப் பகுதியில் நடைபெற்றுவந்த போரை நிறுத்திக்கொள்ள இருநாட்டு அரசும் முடிவெடுத்துள்ளன.

Syria
Syria
author img

By

Published : Mar 6, 2020, 2:35 PM IST

சிரியாவை ஒட்டியுள்ள துருக்கியின் எல்லைப்பகுதியில் கடந்த மூன்று மாதமாக தீவிரமான போர் நடைபெற்றுவருகிறது. சிரியாவில் நிலவும் உள்நாட்டுக் குழப்பம், போர் சூழல் ரஷ்யா-துருக்கி இடையே போராக மாறி கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போரால் எல்லைப்பகுதியில் உள்ள அகதிகள் பாதுகாப்புக் கருதி ஐரோப்பாவை நோக்கி நகர்வது பிராந்தியத்தில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் போரைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் எர்டோகன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இதையடுத்து பதற்றத்திற்குரிய இத்லிப் பகுதியில் இருநாட்டு அரசும் ராணுவத்தை வெளியேற்றம் செய்ய முடிவெடுத்துள்ளன.

மேலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் முன்னெடுக்கும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டுள்ளது.

சிரியா-துருக்கி நாட்டு எல்லையிலிருந்து ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டுக்கு ஆயிரக்கணக்கான அகதிகள் படையெடுத்துவருவதால், அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் பத்திரம் மூலம் 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டவுள்ளோம்- டி.எல்.எஃப்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.