Syria War சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்திவிட்ட காரணத்தால் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தங்களது படையினரைத் திரும்பப் பெறுகிறோம் அமெரிக்க அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
சிரியாவுக்கு துருக்கிப் படையினர் வந்தால் தங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதென்று குர்து போராளிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். (துருக்கி அரசைப் பொறுத்தவரை குர்து போராளிகள் பயங்கரவாதிகள்)
இதையும் வாசிங்க : வார்த்தைப் போரிடும் அமெரிக்கா-துருக்கி!
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடனான சண்டையில் அமெரிக்கப் படைகளுக்குப் பெரிதும் உதவியவர்கள் குர்து போராளிகள். இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு எல்லையோரத்தில் நேற்று துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குர்து தலைமையிலான சிரிய ஜனநாயகப் படையினர் தெரிவித்துள்ளனர்.