ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினத்தை இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் தகவல்கள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதமியின் புரொசிடிங்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹென்னிகுயா சால்மினிகோலா என்ற ஒட்டுண்ணியை இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அதில் அந்த ஒட்டுண்ணி இயங்குவதற்கும், உயிா் வாழ்வதற்கும் ஆக்சிஜன் வாயு தேவைப்படாததைக் கண்டறிந்துள்ளனா்.
பத்து செல்கள் கொண்ட அந்த ஒட்டுண்ணி, பெரும்பாலும் கிழங்கான் வகை மீன்களின் உடலில் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. ஆய்வில் இந்த ஒட்டுண்ணியில் மைட்டோகாண்ட்ரியா இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் டாரதி ஹூக்கோன் (Dorothee Huchon) கூறுகையில், “இதை ஆய்விற்கு உட்படுத்தும் போது, இதன் சுவாச பகுதி எங்கு உள்ளது என்பதைத்தான் கண்டறிய முற்பட்டோம். ஆனால் முடிவில் சுவாச உறுப்பின்றி உள்ளதைக் கண்டறிந்தோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கோரேகான் பீமா: இதுவரை 348 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன