சவூதியில் மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் தலைமையில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக மன்னரின் இளைய சகோதரரும், இளவரசருமான அகமது பின் அப்துல்லாசிஸ், மருமகன் முகமது பின் நயீஃப் என ராஜ குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சவூதி அலுவலர்களிடம் கேட்டபொழுது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
2017ஆம் ஆண்டு வரை, முகமது பின் நயீஃப் தான் சவூதியின் பட்டத்து இளவரசர். மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸுக்குப் பிறகு இவர் தான் அரியணை ஏறுவதாக இருந்தது. ஆனால், அதே ஆண்டில் மன்னர் சல்மான், தன் மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஊழலில் உழன்றிருந்த ராஜ குடும்பத்தினர், தொழிலதிபர்களை ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்து, தன் அதிகாரப் பிடியை இறுக்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்த கைதானது பார்க்கப்படுகிறது.
மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் உயிருடன் இருக்கும் வரை, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நடவடிக்கைகளை ராஜ குடும்பத்தினர் கேள்வி கேட்க மாட்டார்கள் என அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: களமிறங்கிய உலக சுகாதார அமைப்பு!