கரோனா பரவல் காரணமாக உலகளவில் பொது முடக்கம் பல்வேறு கட்டங்களாகப் பின்பற்றப்படும் நிலையில், இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா கடந்த மார்ச் மாதத்திலிருந்து கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. உள்ளூர் வாசிகளைத் தவிர வெளிப் பார்வையாளர்கள் யாரும் மெக்காவுக்கு வர சவுதி அரசு தடை விதித்திருந்தது.
கடந்த ஏழு மாத காலமாக மெக்காவில் கட்டுப்பாடுகள் அமலிலிருந்த நிலையில் அங்கு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உம்ரா சிறப்புத் தொழுகைக்காக வரும் அந்நாட்டு மக்களை அக்டோபர் 4ஆம் தேதி முதல் 6 ஆயிரம் பார்வையாளர்களை அனுமதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக அக்டோபர் 18ஆம் தேதி முதல் 15 ஆயிரம் பார்வையாளர்களை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நவம்பர் 1ஆம் தேதிக்குப் பின் வெளிநாட்டு பார்வையாளர்களையும் அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்