சவுதி அரேபியாவில் சட்டத்தை மீறுபவர்களை பொது வெளியில் வைத்து சவுக்கு அடி கொடுக்கும் தண்டனை காலம் காலமாக நடைமுறையிலிருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தண்டனை முறையை உடனடியாக ரத்து செய்யுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ், அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் ஆகியோர் கொண்டு வந்த மனித உரிமை மீறல் சீர்திருத்தங்களின் பகுதியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
2015ஆம் ஆண்டு, ரையீஃப் பத்வாயி என்ற அரபி எழுத்தாளர் சைபர் கிரைம், மத நிந்தனைக் குற்றங்களுக்காக, அவருக்கு ஒவ்வொரு வாரமும் ஆயிரம் சவுக்கடி கொடுக்க வேண்டும் என சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த விவகாரம் உலகளவில் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், ரையீஃப் பத்வாயியின் தண்டனை நிறுத்தப்பட்டது.
சவுக்கு அடி தண்டையை ரத்து செய்யுமாறு தற்போது உச்சநீதிமன்றம் கூறியிருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என மனித உரிமை ஆர்வலர்கள் உற்சாகம் பொங்க தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : கர்ப்பிணிகளுக்கு தனி அறைகளை ஒதுக்க கோரிக்கை