2011இல் 'அரபு வசந்தம்' ஏற்பட்ட பிறகு 2012இல் எகிப்தில் நடந்த முதல் தேர்தலில் வென்று அதிபரானவர் முகமது மோர்சி. பின்னர் 2013இல் ஏற்பட்ட ராணுவப் புரட்சி காரணமாக பதவியிலிருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தபட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் ஒரு வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அவர், திடீரென்று மயங்கிவிழுந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காததால் நேற்று இறந்தார்.
அவரது திடீர் மறைவுக்கு பல உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.