இஸ்ரேலின் ஆளும் கட்சியான லிக்குட் கட்சியின் தலைவர் மைக்கேல் கிளீனருக்கு அண்மையில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக அறியமுடிகிறது.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைக் கருத்தில்கொண்டு, இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டங்கள் காணொலி வாயிலாக நடத்தப்படுவதால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படாது என ஜெருசலேம் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு காரணமான சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் திரள வேண்டும் - அமெரிக்க அரசு