மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் பிரதமராக பென்ஜமின் நெதன்யாகு 2009ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.
இஸ்ரேலின் நாட்டில் நீண்ட காலம் பதவியைத் தக்க வைத்த பிரதமர் என்ற பெருமைக்குறிய நெதன்யாகுவுக்கு எதிராக பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (மே 24) நடைபெற்ற விசாரணையின் போது பிரதமர் நெதன்யாகு நேரில் ஆஜரானார். இஸ்ரேல் நாட்டில் பதவியிலிருக்கும் பிரதமர் ஒருவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த ஓராண்டாக இஸ்ரேலில் நிலவிவந்த அரசியல் அசாதாரண சூழல் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் நெதன்யாகு ஆஜரானார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா உறுதி