ETV Bharat / international

'வெற்றி... வெற்றி... வெற்றி...!' - இஸ்ரேல் அதிபராக மீண்டும் நெதன்யாகு?

ஜெருசலேம்: அதிபர் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளால் நெதன்யாகு மகிழ்ச்சியில் உள்ளார்.

benjamin
benjamin
author img

By

Published : Mar 3, 2020, 11:42 AM IST

மத்திய கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் இதயமாகக் கருதப்படும் இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்குள் மூன்று முறை தேர்தலைச் சந்தித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல் புகார் எழுந்து அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வந்தது.

இதைத்தொடர்ந்து நெதன்யாகு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கைவைக்க, இந்தத் தீர்ப்பு தொடர்பாக நெதன்யாகு மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், அங்கு தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க முடியாமல் தவித்துவருகிறது. இதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 69 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் 71 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லுகிட் கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் நெதன்யாகு தனது ட்விட்டர் பக்கத்தில், 'இது இஸ்ரேலுக்கான வெற்றி. எங்கள் அரசின் செயல்பாடுகளில் நம்பிக்கை வைத்து வாக்களித்த இஸ்ரேல் மக்களுக்கு நன்றி' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில் நீண்ட நாட்களாக நிலவிவந்த முடக்கம் இஸ்ரேலில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: ஈரானை அச்சுறுத்தும் கொரோனா, முக்கியத் தலைவர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.