இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள பெண் சவுமியாவின் உடல், விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு, வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோனி யெடிடா கிலேன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். சவுமியாவின் உடல் கேரளாவில் உள்ள அவரது கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இஸ்ரேலில் வயதான மூதாட்டியை பராமரிக்கும் வேலையை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.