ETV Bharat / international

இஸ்ரேல் பிரதமரை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்! - ஜெரூசலத்தில் மக்கள் போராட்டம்

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை பதவி விலகக் கோரி அந்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் பிரதமரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்!

author img

By

Published : Oct 11, 2020, 7:26 PM IST

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மீது அந்நாட்டில் பெரு முதலாளிகளிடம் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

அத்துடன், அவருக்கு ஆதரவாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட பல முன்னணி ஊடகங்களுக்கு அவர் பரிசுகளைக் கொடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதும் அம்பலமானது.

இதனையடுத்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முறையாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்தக்கோரி இஸ்ரேலியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்றுவரும் இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்க தவறிய அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பென்ஜமின் நெதன்யாகு பிரதமர் பதவியை அலங்கரிக்க தகுதியற்றவர் என்று கூறி நேற்று (அக்.10) இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக,ஜெருசலேமில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வமான இல்லத்தையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மத்திய டெல் அவிவில் உள்ள ஹபிமா சதுக்கத்தில் நடந்த மிகப்பெரிய கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கறுப்புக் கொடிகள், பதாகைகள் ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இடதுசாரிகள், அராஜகவாதிகள் தான் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உள்ளனர்" என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மீது முதலாளிகளிடம் கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.