டெல் அவிவ்: தெற்கு இஸ்ரேலிய நகரமான அஷ்கெலோன் மற்றும் காசா பகுதியின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் நேற்று (டிச. 25) பிற்பகலில் வான்வெளித் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதல்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, இந்தத் தாக்குதலுக்குப் பதிலளிக்க எண்ணிய இஸ்ரேலிய விமானப்படை, காசா பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தளங்களில் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனிய சன்னி அமைப்பான ஹமாஸின் ராக்கெட் உற்பத்தி செய்யும் இடம், நிலத்தடி வசதிகள் மற்றும் ஹமாஸ் இஸ்லாமிய இயக்கத்தின் ராணுவ பகுதி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
யூத மக்கள் அதிகம் வசிக்கும் அண்டை நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை தன்னுடையது என உரிமை கோரிவருகிறது. இதனிடையே, பாலஸ்தீனத்தின் மேற்கு நதிக்கரையில் இஸ்ரேல் மக்கள் நீண்ட காலமாக குடியேறிவருகின்றனர். இதை ஐநா ஆக்கிரமிப்புகளாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே இதுபோன்ற தாக்குதல்கள் அதிகளவில் நடந்துவருகின்றன.
இதையும் படிங்க: உலகை திசைதிருப்பும் நெதன்யாகு - பாலஸ்தீனம் குற்றச்சாட்டு