ஜெருசலேமுக்கான பாலஸ்தீனிய அமைச்சர் ஹமிதி வீட்டை இன்று காலை திடீரென சோதனையிட்ட இஸ்ரேல் படையினர், வீட்டிலிருந்த அவரை காவலில் எடுத்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதுபோன்று, பாலஸ்தீனிய கட்டுப்பாட்டில் உள்ள ஜெருசலேமின் ஆளுநர் அத்னான் காய்த் வீட்டையும் சோதனையிட்டனர். ஆனால் சோதனையின்போது அவர் வீட்டில் இல்லாததால், விசாரணைக்கு ஆஜராகுமாறு இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து இஸ்ரேல் அரசு விளக்கம் அளிக்கவில்லை.
முன்னதாக, ஜெருசலேமைச் சேர்ந்த ஒருவரைக் கடத்தியதாகக் கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமிதி இஸ்ரேல் படையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய பகுதியை தனிநாடாக அறிவிக்கக் கோரி அந்நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றனர்.