ETV Bharat / international

பாக்தாத் ராணுவ பகுதியில் ராக்கெட் தாக்குதல்! - பாக்தாத் அருகே தாக்கிய மூன்று ராக்கெட்டுகள்

பாக்தாத் அருகே நேற்று மூன்று ராக்கெட்டுகள் தாக்கியதாக ஈராக் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

பாக்தாத் அருகே தாக்கிய மூன்று ராக்கெட்டுகள்

author img

By

Published : May 7, 2020, 9:51 AM IST

பாக்தாத் விமான நிலையத்தின் ராணுவ பகுதி அருகே நேற்று அதிகாலை மூன்று கத்யுஷா ராக்கெட்டுகள் தாக்கியதாகவும், ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், பிரதமராக நியமிக்கப்பட்ட முஸ்தபா அல் காதிமியால் முன்மொழியப்பட்ட அரசிற்கு வாக்களிக்கும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து பாக்தாத்திற்கு மேற்கே உள்ள அல்-பார்கியா பகுதியில் ராக்கெட்டுகளின் ஏவுதளத்தை ஈராக் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் எந்தவொரு குழுவும் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

இதுகுறித்து ஈராக் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் பேசுகையில், ராக்கெட்டுகளில் ஒன்று ராணுவ விமான நிலையத்திலுள்ள ஈராக் படைகளுக்கு அருகிலும், அமெரிக்க தடுப்புக் காவல் நிலையமாக ஒருகாலத்தில் இருந்த கேம்ப் கிராப்பருக்கு அருகில் ஒரு ராக்கெட்டும், மூன்றாவது ராக்கெட் அமெரிக்க படைகள் இருந்த இடத்திலும் தாக்கியதாகக் கூறினார். சதாம் ஹுசைன் மரண தண்டனைக்கு முன்னர் இந்த கேம்ப் கிராப்பர் சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அமெரிக்கா தவறிழைத்துவிட்டது - சுகாதாரத் துறை அலுவலர் பரபரப்பு குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.