ஈராக்கில் பெருகிவரும் வேலையின்மை, ஊழல், ஒழுங்கற்ற நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் சுட்டிக்காட்டி அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் கலவரத்திலேயே முடிகின்றன. இதனால் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, தொலைத்தொடர்பு துண்டிப்பு என அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதுதவிர, கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடும் நடத்திவருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட 100பேர் உயிரிழந்துள்ளதாக ஈராக் நாடாளுமன்ற மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈராக் பிரதமர் அப்துல் மக்தி பதவி விலக வேண்டும் என்ற குரலும் வலுத்துவருகிறது.
இதையும் படிங்க: ஈராக்கின் அதிமுக்கிய குற்றவாளிகள் தென்னிந்தியாவில் தலைமறைவு - உஷாரான தமிழ்நாடு போலீஸ்!