இன்று காலை ஈராக் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் ஈரான் ராணுவ தளபதி கசோம் சுலைமானி, கொல்லப்பட்டார். ராணுவ தளபதி பலியானதையடுத்து, ராணுவத் துணைத் தளபதி எஸ்மெயில் கானியை புதிய தளபதியாக ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனி அறிவித்தார்,
ராணுவத்தின் வேலைத்திட்டத் ல் எந்த மாற்றமும் இருக்காது என்று கசோம் சுலைமானி இருந்தபோது ராணுவம் எப்படி செயல்பட்டதோ அதேபோலவே இப்போதும் தொடரும் என்று ஈரான் அதிபர் கூறியதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
"புகழ்பெற்ற ராணுவ தளபதி கசோம் சுலைமானியின் தியாகத்தைத் தொடர்ந்து, எஸ்மெயில் கானியை இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியாக நான் முன்மொழிகிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டிருந்த சோலிமானியுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இது அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையே உள்ள பதட்டங்களை அதிகரித்துள்ளது. மேலும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா