ETV Bharat / international

இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை! - Israel-Palestine news

போர் மேகம் சூழ்ந்துள்ள இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை
இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை
author img

By

Published : May 13, 2021, 7:32 AM IST

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. புனித ரமலான் மாதத்தை ஒட்டி இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள புனிதத்தலத்தில் வழிபட பாலஸ்தீனியர்கள் குழுமியிருந்த போது இஸ்ரேல் காவல்துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் மோதல் வெடித்தது.

அதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையான காசாவில் இரு நாள்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறிமாறி வான்வெளித் தாக்குதல் நடத்தி வருவதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் சிக்கி கேராளவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு, இந்திய தூரதரகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், 'இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் நிலைமையை கூர்ந்து கண்காணித்து உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். ஏதுனும் உதவி வேண்டும் என்றால் தூதரக உதவியை இணையதளம், தொலைபேசி வாயிலாக நாடலாம்' எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஹமாஸ் இயக்கத்தின் ராக்கெட் தாக்குதலில் கேரள பெண் பலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.