பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கடந்த வெளிக்கிழமை, நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில்,
போரில் தோற்றதும் கோழைத்தனமாய் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிய பஹதூர் ஷாவைப் போன்றில்லாமல், தன் கடைசி மூச்சுவரை தாய்நாட்டைக் காப்பதற்காகப் போராடிய திப்பு சுல்தானே தன்னுடைய முன்னோடி' என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு இதுபோன்று பேசிய இம்ரான்கான்,' நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பஹதூர் ஷாவைப் போன்று குள்ளநரியாக இருக்கலாம், அல்லது திப்பு சுல்தானைப்போல் சிங்கமாக இறக்கலாம்" என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.