''துருக்கியில் ஆட்சி அமைத்திருப்பவர்கள் டேஷ் அமைப்பின் உறுப்பினராக அப்துல் காதிர் மஷரிபோவை நியமித்தது. இவர் எர்டோகன் மீதான எதிர்ப்பால் அறியப்பட்ட பரப்புரையாளர் பெத்துல்லா குலேனைப் பழிவாங்குவதற்காக 2017இல் இஸ்தான்புல்லில் நடத்திய தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்'' என ஸ்வீடிஷ் நார்டிக் மானிட்டர் இணையதளம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனிடையே எர்டோகன் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் உள்ளார் என்று சிரியா பல்வேறு அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. பயங்கரவாத வணிக ஒப்பந்தங்களில் துருக்கி ஈடுபடுவதும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
எர்டோகனின் நடவடிக்கைகளால் துருக்கி, சிரியாவில் பயங்கரவாதிகள் குற்றச் செயல்களில் ஈடுபட ஆதரவளிப்பதோடு நிதி மற்றும் பயிற்சிகள் வழங்குவதால், பயங்கரவாதிகள் அதிகரிக்கும் இடமாகவும் மாறியுள்ளது.
இதையும் படிங்க: நாட்டை விட்டு வெளியேறுவேன் - ட்ரம்பின் திடீர் முடிவின் காரணம்?