மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவிவந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், 2018 டிசம்பர் மாதம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை தாங்கள் வென்றுவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, அங்கு நிலவிவந்த பதற்றமான சூழ்நிலை தணியத் தொடங்கியது. இதற்கிடையே, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள இந்தியத்தூதரகத்தையும், அதில் பணிபுரியும் தூதர்களையும் பாதுகாக்க சிஆர்பிஎஃபின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஒன்று அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
40 மேற்பட்ட வீரர்களைக் கொண்ட இக்குழு 24 மணி நேரமும் அல் மன்சோரில் (Al Mansour) பகுதியில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தை வளாகத்தைக் காத்து வருகின்றனர்.