ஆர்.வி. இன்வெஸ்டிகேட்டர் என்பது கடல்சார் தேசிய அமைப்பின் ஒரு பகுதியாகும். இது ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு பிரத்யேக கடல் ஆராய்ச்சி மையம். இது தற்போது சி.எஸ்.ஐ.ஆர்.ஓ கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்த ஆர்.வி. இன்வெஸ்டிகேட்டருக்கு சொந்தமான கப்பல் ஒன்று, டாஸ்மேன் கடலில் பயணித்து வருகிறது. இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள லைவ் ஸ்ட்ரீமிங் கேமரா, 24 மணி நேரமும் படம்பிடிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, இந்த கப்பலின் எதிரே பச்சை நிற ஒளி ஒன்று வானில் செல்வதை கப்பலின் ஊழியர்கள் வியப்பில் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், கப்பலின் கேமரா மிகவும் துல்லியமாக அதனை படம்பிடித்துள்ளது.
இதுகுறித்து கப்பலில் பணியாற்றும் ஜான் ஹூப்பர் கூறுகையில், "லைவ்ஸ்ட்ரீம் காட்சிகளை மறுபரிசீலனை செய்வதில் நாங்கள் கண்டது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த விண்கல்லின் அளவு மற்றும் பிரகாசத்தை நம்ப முடியவில்லை. விண்கல் வானத்தை கடந்ததும் உடையும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த அபூர்வ நிகழ்வுகள் எங்கள் கேமராவில் பதிவானது எங்களின் அதிர்ஷ்டம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்