உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாட்டின் விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் பிரிவில் பணிபுரியும் பேராசிரியர் யாகோவ் நஹ்மியாஸ், நியூயார்க்கின் மவுண்ட் சினாய் மருத்துவ மையத்தில் பெஞ்சமின் டென்ஓவருடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
இதுதொடர்பாக நஹ்மியாஸ் கூறுகையில், கரோனா தொற்று பாதிப்பானது லிப்பிட்களை நேரடியாக நுரையீரலில் செலுத்துகிறது. இதன் விளைவாக, நுரையீரல் உயிரணுக்களுக்குள் அதிக அளவு கொழுப்பு குவிகிறது.
வழக்கமாக கார்போஹைட்ரேட் வெளியேற்றத்தை கரோனா வைரஸ் தடுக்கிறது. இதனால் தான், உயர் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.
இதுதொடர்பாக ஆய்வு நடத்தியதில், ட்ரிகோர் என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் கொழுப்பைக் குறைக்கும் மருந்து ஃபெனோஃபைப்ரேட் பயன்படுத்தினால் நல்ல முடிவுகள் கிடைக்கின்றது.
இவை நுரையீரல் செல்களிலிருக்கும் கொழுப்பைகளை எரிக்க அனுமதிக்கிறது. மேலும், செல்கள் மீதான வைரஸின் பிடியை உடைத்து கரோனா இனப்பெருக்கம் செய்யும் திறனையும் தடுக்கிறது.
கரோனா பாதித்தவர்களின் உயிரணுக்களுக்களை சோதனை மேற்கொண்டதில், ஐந்து நாள்களுக்குள் வைரஸ் குணமடைகிறது" எனத் தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில், உலகெங்கும் வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் பல நாட்டின் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். ஆனால், தடுப்பூசியால் சில மாதங்களுக்கு மட்டுமே கரோனா தொற்றைத் தடுக்க முடியும். வைரஸை கட்டுப்படுத்த அதன் செயல் திறனை முறிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.