ETV Bharat / international

சிரிய ராணுவக் கிடங்குகள் மீது தாக்குதல் : இஸ்ரேல் மறுப்பு - சிரியா இஸ்ரேல்

சிரியாவின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேலைச் சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக சிரிய ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதை மறுத்துள்ளது.

சிரிய ராணுவக் கிடங்குகள் மீது தாக்குதல், மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல்

author img

By

Published : May 5, 2020, 2:23 PM IST

சிரியாவிலுள்ள அலெப்போவின் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற வான்வழித் தாக்குதல்கள், சஃபிராவில் உள்ள பல ராணுவக் கிடங்குகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இஸ்ரேலைச் சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் சிரியாவின் தெற்குப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அலெப்போவில் உள்ள ஒரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரியாவின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது

மே 4ஆம் தேதி இரவு எதிரிகளின் விமானங்களை தங்கள் வான்வெளி கண்காணிப்புத் திரையில் கண்டதாகவும், சஃபிராவில் ராணுவக் கிடங்குகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்கள் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் எதிரி ஏவுகணைகளை விரட்டியடித்ததாகவும், சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பிறநாட்டு ஊடகங்களின் அறிக்கைகள் குறித்து தாங்கள் கருத்துத் தெரிவிப்பதில்லை என இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படை , இந்தத் தகவலை மறுத்தும் உள்ளது.

இதையும் படிங்க : நம் சாம்பலை உன்னத மனிதர்களின் கண்ணீர் ஈரமாக்கும் - மாமேதை கார்ல் மார்க்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.