ரியாத்: 41ஆவது வளைகுடா கூட்டுறவு கவுன்சில் மாநாடு சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் இன்று நடைபெறவுள்ளது. சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாஷிஷ் அல் சவுத் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டுறவின் உறுப்புகள் மீண்டும் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய சவுதி இளவரசர், "வளைகுடா கூட்டுறவு கவுன்சில் மாநாட்டின் மூலம் நாம் ஒன்றிணையவுள்ளோம். வளைகுடா நாடுகள் சந்தித்து வரும் சவால்களை நாம் ஒன்றாக எதிர்கொள்ளும் நேரம் இது" என்றார்.
முன்னதாக, பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கத்தார் உடனான ராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, சவுதி உள்ளிட்ட நாடுகள் ரத்து செய்தன. இந்நிலையில் கத்தாருடனான எல்லையை மீண்டும் திறக்கப்போவதாக, குவைத் அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாநாட்டில் இதுகுறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 600 மில்லியன் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ள மாடர்னா!