ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து 120 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது நாங்கஹார் மாகாணம். இம்மாகாணத்தில் உள்ள தெஹ் பாலா என்னும் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பு பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாங்காங் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவிவருகிறது.
இதன்காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான், ஐஎஸ்ஐஎஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களால் அந்நாட்டில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவிவருகிறது.