ஈராக்கில் பெருகி வரும் ஊழல், வேலையின்மை உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அந்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ளிட்ட நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவை மீறி, இன்று மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்களைக் கலைக்க காவல் துறையினர் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள், துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், ஒரு காவல் துறையினர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஈராக் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு - ஏராளமானோர் காயம்!
ஈராக்கின் பிரதமர் அப்துல் மஹ்தி ஆட்சியை ஏற்று சில வாரங்களில் ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் அவரது ஆட்சிக்கு சவலாக அமைந்துள்ளது.