பாக்தாத்திற்கு அருகே 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஈராக் ராணுவ தளத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீது மீண்டும் இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்தவர்கள், பலியானவர்கள் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பும் ஏற்கவில்லை.
ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின்பேரில் அமெரிக்க ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசின் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பழிவாங்கியே தீருவோம் என கூறியதையடுத்து, அமெரிக்கப்படைகள் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவருகிறது. இந்த தாக்குதலால், இருநாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மன்னிக்க முடியாத தவறு': உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!