சிரியா நாட்டில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதில் சிரியா அரசுக்கும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில், அந்நாட்டு மக்கள் தினம் தினம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.
சிரியா அரசுக்கு ரஷ்யா நாடு உதவுவதுபோல், அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவிவருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதத்தில் சிரியாவில் இருதரப்பிற்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தள்ளாக ஐரோப்பா ஒன்றியத்தின் மனித உரிமை தலைமை ஆணையர் மைக்கேல் பாச்லட் (Michelle Bachelet) தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு அதிபர் பஷர் அசாதீனின் அரசு படைகள், கடந்த ஏப்ரல் 29இல் இருந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 304 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 31 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.