அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் காவலர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக அமெரிக்கா, கிரீஸ், இத்தாலி, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தீவிர போராட்டங்கள் நடைபெறுகின்றன.
பிரிட்டனில் உள்ள லண்டன் நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் சிலை சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற கோஷத்துடன் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், போராட்டக்காரர்களில் சிலர் அங்கிருந்த சர்ச்சில் சிலையை தாக்கியுள்ளனர். அத்துடன் இனவெறி பிடித்த சர்ச்சில் என்ற வாசகத்தையும் அந்த சிலையின் கீழ் எழுதியுள்ளனர்.
இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் கைது செய்யப்படுவார்கள் என லண்டன் நகர காவல்துறையினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமுல் ட்விட்டர் முடக்கம்!