ETV Bharat / international

வைரஸ் பரவி கொண்டுதான் இருக்கிறது' - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஜெனீவா: கரோனா வைரஸ் இன்னும் பரவி கொண்டுதான் இருக்கிறது என லாக்டவுனில் தளர்வுகளை அறிவிக்கும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Virus is 'still circulating: WHO
Virus is 'still circulating: WHO
author img

By

Published : Jun 27, 2020, 12:44 AM IST

உலகளவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 96 லட்சத்தை கடந்துள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பல நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளதால் கரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவுடன் வீடியோ கான்ஃபிரன்ஸில் உரையாடிய உலக சுகாதார அமைப்பின்‌ இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கரோனா தொற்று இன்னும் பரவி கொண்டுதான் இருக்கிறது. பலர் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஆனால், இச்சமயத்தில் தான் பல ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளனர். இதனால், வைரஸ் மீண்டும் பரவ அதிக வாய்ப்புள்ளது" என எச்சரித்தார்.

மேலும் பேசிய அவர், "வைரசுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் மும்முரமாக உள்ளனர். தடுப்பூசி மருந்தை வெற்றிகரமாக யார் கண்டுபிடித்தாலும், அனைத்து உலக நாடுகளும் கிடைக்கும் வகையில் தயாரிக்க வேண்டும்" எனக் கேட்டு கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.