ஆர்ட்டிக் துருவத்தின் பகுதியிலுள்ள மிகப்பெரிய தீவான க்ரீன்லாந்து தன்னாட்சி அமைப்பைப் பெற்றது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் கட்டுப்பாட்டிலிருந்த க்ரீன்லாந்துக்கு, 1940ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
க்ரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் அமெரிக்காவின் தூதரகம் 1940ஆம் ஆண்டிலிருந்து 1953ஆம் ஆண்டு வரை செயல்பட்டுவந்தது. பின்னர் தூதரகம் மூடப்பட்ட நிலையில், 67 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பாம்பியோ பேசுகையில், நூக்கில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டுள்ளது, இரு நாட்டு உறவை நிலைநிறுத்தும் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க-க்ரீன்லாந்து உறவில் புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. இதன் மூலம் க்ரீன்லாந்து, டென்மார்க்கில் உள்ள குடிமக்களின் வளர்ச்சியை அமெரிக்க அரசு உறுதிசெய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
வெறும் 56 ஆயிரம் பேர் மக்கள்தொகை கொண்ட க்ரீன்லாந்தில் ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை நடவடிக்கைகளை மட்டும்தான் டென்மார்க் நிர்வகித்துவருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதிவியேற்ற பின் க்ரீன்லாந்தை டென்மார்க்கிடமிருந்து வாங்க முயற்சித்தார். ஆனால் அதற்கு டென்மார்க் அரசு மறுத்துவிட்டது.
இதையும் படிங்க: 'தேர்தல் நடக்கனும்னா கம்முனு இருங்க’ அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா!