கரோனா பெருந்தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பிற்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என அதிபர் ட்ரம்ப் நேரடியான விமர்சனத்தை முன்வைத்தார். மேலும், சீனாவை காப்பாற்றும் விதமாக கரோனா பெருந்தொற்று விவகாரத்தில் ஒழுங்காகச் செயல்படவில்லை எனவும், அந்த அமைப்புக்கு அதிக நிதியளிக்கும் அமெரிக்கா இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அத்துடன் அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும், இதுவரை வழங்கப்பட்ட நிதி முற்றாக நிறுத்திவைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்த சூழல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் கெப்ரேயஸ் பேசுகையில், அமெரிக்காவின் சுகாதார மற்றும் மக்கள் நலத்துறை செயலர் அலெக்ஸ் அசார் உலக சுகாதார அமைப்புடன் நல்ல தொடர்பில் உள்ளார். காங்கோ பகுதியில் எபோலா நோய் பரவியது குறித்து அவரிடம் ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தாலும் அமெரிக்க நிர்வாகிகள் அமைப்புடன் இணைந்தே செயல்படுகின்றனர். இந்த ஒற்றுமை இனிவரும் காலத்திலும் தொடரும் என நம்புகிறேன் என்றார்.
இதையும் படிங்க: சீனாவில் பெருவெள்ளம்: 2.28 லட்சம் பேர் வெளியேற்றம்!