உலகளவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்துவரும் நிலையில், அனைத்து முன்னணி நாடுகளும் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் தடுப்பூசி செயற்குழுவின் தலைவர் கேட் பிங்ஹாம் தற்போது முக்கியத் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதன்படி, "கோவிட்-19 தடுப்பூசி உருவாக்கும் பணிகள் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை கண்டுவருகின்றது. வரும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன் தடுப்பூசி முதற்கட்ட தேவைக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்து தயாரான உடன் மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அது பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்ற கருத்து தற்போது நடைமுறை சாத்தியமற்றது.
எனவே, வயதானவர்கள், முன்களப் பணியாளர்கள் போன்ற முதன்மை தேவை கொண்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி முதல் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாட்டில் மட்டும் ஆறு தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளதாக செயற்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டை விட்டு வெளியேறுவேன் - ட்ரம்பின் திடீர் முடிவின் காரணம்?